தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

by Admin / 06-09-2026 06:20:16pm
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி ,பெரம்பலூர் ,அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தேனி, திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை ,விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் இடியுடன் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo