சென்னை இரண்டாவது பசுமை விமான நிலையம்- செய்யூர், கும்முடிபூண்டி ஆகிய இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
சென்னை பரந்தூரில் அமையவிருந்த இரண்டாவது பசுமை விமான நிலையம் கைவிடப்பட்டதை அடுத்து தமிழக அரசு மாற்று இடங்களாக செய்யூர், கும்முடிபூண்டிஆகிய இடங்களை பட்டியலிட்டுள்ளது. இவ்விருபகுதிகளிலும் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. செய்யூரில் விமான நிலையம் அமைந்தால் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் தொழில் துறை வளர்ச்சி உருவாகும் என்றும் கும்முடி பூண்டி சென்னையின் வடக்கே ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதனால் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதால் சரக்கு போக்குவரத்து தொழில்துறைக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஆனாலும், தடைகளாக இருப்பவை சென்னை நகரத்திலிருந்து அதிக தொலைவில் இருப்பதாலும் அதிக வேக போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதில் சவால்கள் ஏற்படும் என்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலய சுற்றுச்சூழல் அனுமதிகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதலத்திற்கு அருகில் உள்ளதாலும் வான்வழி கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும் என்றும் சொல்லப்படுகின்றது. இருப்பினும் சென்னையின் நீண்ட கால பயணிகள் வருகை மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை சமாளிக்க இந்த விமான நிலையம் அவசியம் என்பதால் இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வில் நடத்தி விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை இந்திய விமான ஆணையும் அறிக்கை சமர்ப்பித்த பின்பு எந்த இடம் என்பது இறுதியாகும்.
Tags :


















