சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒன்றிய அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்கமுன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு .க .ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் குளறுபடிகள் இல்லாமல் இருக்க ஒன்றிய அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தற்பொழுது திட்டமிடப்பட்டுள்ள சென்சஸ் 2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு நிலையை கணக்கிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பட்டியல் இல்லாமல் பொதுமக்கள் கூறும் சாதிப் பெயர்களை அப்படியே கைமுறையாக பதிவு செய்யும் முறையை ஒன்றிய அரசு பயன்படுத்த போவதாக அறிவித்துள்ளது இந்த முறை ஏமாற்றம் அளிப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் 46 லட்சம் ஜாதிகள் இருப்பதாக தவறான குளறுபடி கணக்குகள் வர வாய்ப்புள்ளது என்றும் ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநில அரசிடமும் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அதிகாரப்பூர்வ பட்டியலை பெற்று தொகுக்க வேண்டும் என்றும் மக்கள் தங்கள் ஜாதியை அந்த பட்டியலில் இருந்து நேரடியாக தேர்வு செய்யும் முறையை வழங்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் சரியான தரவுகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளதோடு தற்போதைய தவறான முறையை பின்பற்றினால் இதற்காக ஒதுக்கப்படும் சுமார் 12,000 கோடி மக்கள் பணமும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பு வீணாகி இது வெறும் கண்துறைப்பாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளதோடு தமிழ்நாட்டு மக்களின் சமூக நீதி உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :



















