திமுகவின் மீது மதிமுக தலைமை மன வருத்தம், -துரை வைகோ.

by Staff / 07-06-2025 12:03:13am
திமுகவின் மீது மதிமுக தலைமை மன வருத்தம்,  -துரை வைகோ.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதிமுகவின் திண்டுக்கல்  மாவட்ட பொருளாளர் சத்திரப்பட்டி சங்கீதா பழனிச்சாமி  அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை புரிந்த மதிமுக வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ  செய்தியாளர்களை சந்தித்தார்.


1.திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பு மனுதாக்களின் போது ஏன் மதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என செய்தியாளர்களின் கேள்விக்கு 

தலைவர் வைகோ அவர்கள் கோவையில் திருமண நிகழ்ச்சி காரணமாகவும், தனக்கு ஒட்டன்சத்திரத்தில் முக்கிய நிர்வாகியின் திருமண நிகழ்ச்சி காரணமாகவும் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார்,

2. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி நீடிக்குமா?என்ற கேள்விக்கு 

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் மக்கள் பணி தொடரும் எனவும், இருப்பினும் திமுகவின் மீது தொண்டர்களும் நிர்வாகிகளும் தலைமையும் மன வருத்தத்தில் உள்ளதாகவும்  பதில்  அளித்து உள்ளார்.

உடன் மதிமுகவின் மாவட்ட செயலாளர் செல்வராகவன், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Tags : துரை வைகோ

Share via