கடைசி டி20 கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற 4 டி20 ஆட்டங்களில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இன்று இரவு 11:05 மணிக்கு கடைசி டி20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில், இந்திய அணி, தனது ஆதிக்கத்தை தொடர வெற்றிக்குப் போராடும். அதேபோல், ஆறுதல் வெற்றிக்காக இங்கிலாந்து அணியும் முயற்சி செய்யும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Tags :