திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல்
திருச்சி எஸ்.பி.ஐ. காலணியில் நமக்கு நாமே திட்டத்தில், உள்விளையாட்டு அரங்கத்தை, அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர், முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியுள்ளனர். விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவருடன் வந்த ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags :



















