ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி நடுரோட்டில் கொலை

by Editor / 20-07-2022 09:39:40am
ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி நடுரோட்டில்  கொலை

புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்த நாகராஜ் என்பரின் மகள் கீர்த்தனா (18) கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான அதே பகுதியை சார்ந்த முகேஷ் (22) என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால் முகேஷ் அடிக்கடி தகராறு செய்த வந்ததாகவும் தன்னை தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 19மாலை கல்லூரி முடித்த பின்னர் தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை கால் பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தப்பி ஓடிய முகேஷை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Tags : A college student was killed in the middle of the road due to a head-on collision

Share via