ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

by Editor / 13-10-2021 10:41:55am
ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை திடீரென சென்றார். அவருடன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்றனர். அப்போது தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

இதையடுத்து, சில நிமிடங்கள் அவருடன் பேசிவிட்டு, பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டனர். அண்ணாமலை ஆளுநரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியதாவது, கடலூர் முந்திரி ஆலையில் தொழிலாளி படுகொலை விவகாரத்தில் திமுக எம்பி ரமேஷ் சிக்காதிருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது அவரே சரணடைந்து இருக்கும் நிலையில், இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறுகிறதா என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும்.நெல்லை மாவட்டம் கீழச்செவல் நயினார்குளம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு 2 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற கொடூர சம்பவங்கள் திமுக ஆட்சியில் அரங்கேற்றுகின்றனர்.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க கையாலாகாத தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். நெல்லையில் பாஜக நிர்வாகிகள் தாக்கியஞான திரவியம் எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

 

Tags :

Share via