முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்.

by Editor / 16-08-2023 03:25:13pm
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசைமற்றும் தை அமாவாசை  அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை இரண்டு நாட்கள் வந்தது. கடந்த மாதம் (ஜூலை)17-ந்தேதி மற்றும் இன்று(16-ந்தேதி) என 2 நாட்கள் ஆடி அமாவாசை கடைபிடிக்கப்பட்டது.. இன்று ஆடி அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் புனித நீராடு வதற்காக இன்று அதிகாலை 2 மணியில்இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள்.
ஆடி அமாவா சையையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டுஇருந்தது. அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரிக்கு கூடுதல்அரசுசிறப்பு பஸ்கள்இயக்கப்பட்டன.
ஆடி அமாவாசை பலி தர்ப்பணத்தை முன்னிட்டு குழித்துறை மகாதேவர் கோவில் அருகே இன்று சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்தனர். பின்பு குழித்துறை மகாதேவர் கோவில், சாமுண்டீஸ்வரி தேவி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, முன்னோர் கள் நினைவாக வாவுபலி திடலில் இருந்து மரக் கன்றுகளை வாங்கி சென்றனர்.

 

Tags : kanniyakumari

Share via