திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

by Staff / 02-05-2024 01:36:24pm
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) உடல் நலக் குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான உமா ரமணன், நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.2,000ஆம் வருடத்துக்குப் பிறகு படங்களில் பாடுவது குறைந்துவிட்டாலும் 6,000-க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via