சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

by Staff / 05-12-2023 11:44:23am
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு மீது இன்று சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்திருந்தார். 2017-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

 

Tags :

Share via

More stories