நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும்- மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா

by Admin / 31-03-2026 12:35:02pm
நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும்-  மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா

இந்தியாவில் மாவெஸ்டிகளின் உயர் மட்ட தலைமை கிட்டத்தட்ட முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஆற்றிய உரையில் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளின் உயர் மட்ட தலைமை கிட்டத்தட்ட முழுமையாக தொடர்த்த எறியப்பட்டுள்ளது 2024 in தொடக்கத்தில் இருந்த 21 பாலிட்டீரோ மற்றும் மத்திய குழு உறுப்பினர்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் ஏழு பேர் சரணடைந்தன ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் தலைமறைவாக இருக்கும் எஞ்சிய ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 2026 மார்ச் 31க்குள் நாட்டை நக்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. இந்த காலக்கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அதாவது மார்ச் 30 அன்று அமித்ஷா இந்த முக்கிய அறிவிப்பை மக்களவையில் வெளியிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 76 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 20218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4800 க்கு மேற்பட்டோர் சரணடைந்துள்ளனர், ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரின் பக்தார் பகுதி இப்போது வன்முறையற்ற மண்டலமாக மாறி வளர்ச்சியின் பாதைக்கு சென்று கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார் கண்காணிப்பு செயற்கைக்கோள், படப் பகுப்பாய்வு மற்றும் ஏ. ஐ தொழில் நுட்பம் போன்ற நவீன பாதுகாப்பு உத்திகள் மூலம் இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருப்பதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo