ஈரானின் மஸ்ஹத் சர்வதேச விமான நிலையத்தில்அமெரிக்க நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்தது

by Admin / 31-03-2026 11:53:36am
 ஈரானின் மஸ்ஹத் சர்வதேச விமான நிலையத்தில்அமெரிக்க நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்தது

நேற்று ஈரானின் மஸ்ஹத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் மஹான் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் சேதமடைந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஒன்றாம் தேதி புது டெல்லிக்கு வந்து ஈரானிய மக்களுக்காக இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் அத்தியாவாசிய உதவிப் பொருட்களை ஏற்றி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது .இந்த தாக்குதலை ஓர் போர் குற்றம் என்றும் சர்வதேச விமான போக்குவரத்து விதிகளை மீறும் செயலென்றும் ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது .இந்தியாவிலுள்ள ஈரானிய தூதர்ரவும் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலோ அல்ல விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

Tags :

Share via

More stories