முன்விரோதத்தில் பிரபல ரவுடியின் மண்டை உடைப்பு

by Staff / 08-10-2023 05:25:55pm
முன்விரோதத்தில் பிரபல ரவுடியின் மண்டை உடைப்பு

சென்னை: முன்விரோதத்தில் ரவுடியின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே. கே நகர் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் தீனா(23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் தனியாக நின்ற போது, அங்கு வந்த இருவர் தீனாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தீனாவின் மண்டை உடைந்தது. அருகில் இருந்தவர்கள் தீனாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தீனாவின் தாய் புஷ்பா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதத்தில் தாக்கியது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via