பாளையங்கோட்டை மத்திய சிறையில் பிளஸ் டூ தேர்வு மையம்.  

by Editor / 13-03-2023 09:15:14am
பாளையங்கோட்டை மத்திய சிறையில் பிளஸ் டூ தேர்வு மையம்.  

நெல்லை சேரன்மகாதேவி வள்ளியூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் 73 மையங்கள் அமைக்கப்பட்ட தேர்வு நடைபெறுகிறது.பாளையங்கோட்டை மத்திய சிறை உள்ளிட்ட நான்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி நெல்லை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம்.முறைகேடுகளை தடுக்க ஏழு பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது.ஒரு பறக்கும் படைக்கு ஒரு தலைமை அலுவலர் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அலுவலர் இடம்பெறுவார்கள்.தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 73 நிலையான படை அமைக்கப்பட்டுள்ளது.பத்து தேர்வறைகளுக்கு ஒரு நிலையான படை அமைத்து கண்காணிப்பு பணி நடைபெறும்.தேர்வு வரை கண்காணிப்பு பணி உள்ளிட்ட பணிகளில் மட்டும் 1150 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இரண்டு பேர் அடங்கிய கூடுதல் சிறப்பு ஆய்வுக் குழுவும் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.நெல்லை மாவட்டத்தில் தேர்வின் போது சிறப்பு அனுமதி பெற்ற மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் பணிக்காக 187 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிறப்பான அனுமதி பெற்ற மாணவர்களுக்கான தேர்வு எழுதும் முறையை கண்காணிக்க 4 அறைக்கு ஒரு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வர்கள் தவிர்த்து மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via