காணாமல் போன கஞ்சா
உத்தரப்பிரதேசத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மதுரா போலீஸுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் போலீஸோ பறிமுதல் செய்த 581 கிலோ கஞ்சாவையும் எலிகள் சாப்பிட்டுவிட்டதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸாரே வேறொருவரிடம் கஞ்சாவை விற்றுவிட்டு, எலிகளின் மீது பழிசுமத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. போலீசாரே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது நியாயமா..
Tags :