உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு நடிகர் அல்லு அர்ஜுன் அறிவிப்பு.

by Editor / 07-12-2024 07:38:03am
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு  நடிகர் அல்லு அர்ஜுன் அறிவிப்பு.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு ‘புஷ்பா 2' படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். வலி மிகுந்த இந்த நேரத்தில், உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு துணை நிற்பதாக உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Tags : உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு நடிகர் அல்லு அர்ஜுன் அறிவிப்பு.

Share via