இன்று முதல் இணையதளம் வழியாக பி.இ, பிடெக் பொறியியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

by Admin / 05-05-2023 07:28:10am
இன்று முதல் இணையதளம் வழியாக பி.இ, பிடெக் பொறியியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் இணையதளம் வழியாக பி.இ, பிடெக் பொறியியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்றிலிருந்து ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்ப படிவம் எஸ்சி ,எஸ்டி மாணவர்கள் 200 ரூபாயும் மற்ற சமூகத்தினர் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் மாவட்டம் தோறும் அரசு பொறியியல் கல்லூரிகளில்  சேவை மையம் இயங்குவதாகவும் அங்கு  மாணவர்கள் ஆன்லைன் வழியாக  விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி www.tneaonline.org [ டபிள்யூ டபிள்யூ டாட்.tnea ஆன்லைன் டாட் ஆர்க்] www.dte.gov.in என்கிற இணைய முகவரி இல் பதிவு செய்யலாம்.  450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில்  ,கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இடங்கள் உள்ள  நிலையில்  ஒன்னரை லட்சத்திற்கு மேற்பட்ட  மாணவர்கள் கடந்த ஆண்டை  போலவே இந்த ஆண்டும்  சேர்வதற்கான  வாய்ப்புகள்  உள்ளது..

 

Tags :

Share via

More stories