பழுதடைந்த 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்.

by Editor / 18-07-2023 02:43:48pm
பழுதடைந்த 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்.

தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை பொருத்த, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மின்சாரம், மீட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் சரியான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடியவில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள சுமார் 2.06 லட்சம் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories