எடப்பாடி பழனிசாமிமீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் அமைச்சர் தலைமையில் எம்எல்ஏக்கள் சிறப்பு பூஜை

by Editor / 03-12-2022 10:08:35pm
 எடப்பாடி பழனிசாமிமீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் அமைச்சர் தலைமையில் எம்எல்ஏக்கள் சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாபூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் 146 அடி உயரம் கொண்ட முருகன் கோவில் அமைந்துள்ளது. இது உலகிலே மிக உயரமான சிலையாகும். தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் தற்பொழுது பிரசித்தி பெற்ற கோவிலாக அமைந்துள்ளது எந்த கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பொதுச் செயலாளராக வேண்டும் தமிழகத்தின் முதல்வராக மீண்டும் வரவேண்டும் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆத்தூர் ஜெய்சங்கரன் ,ஏற்காடு சித்ரா, கெங்கவல்லி  நல்லதம்பி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் .பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராக மீண்டும் வரவேண்டும் என சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள் சிறப்பு பூஜையில் அதிமுக நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

 

Tags :

Share via