“ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெறுக” - இபிஎஸ் வலியுறுத்தல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “திமுக ஆட்சியில் பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டு வரி, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஓலை வீடுகள், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகளுக்கு பலமடங்கு சொத்து வரி உயர்ந்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சியில் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் தந்தார். ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை அரசு திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Tags :