11ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவனை, 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. கோடை விடுமுறை என்பதால் வீடு வீடாக சென்று, மாணவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் தண்ணீர் கேனை இறக்கி வைத்துக் கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மாணவனை வெட்டியுள்ளது. தற்போது மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :