விரைவில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் - கனிமொழி

by Staff / 20-04-2023 01:11:17pm
விரைவில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் - கனிமொழி

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்,
விரைவில் வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சொத்து பட்டியல் விவகாரத்தில் நானும் நிச்சயம் வழக்கு தொடருவேன். அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்றார். முன்னதாக கடந்த 14ஆம் தேதி திமுகவின் முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo