இன்ஃபார்மராக மாற போலீசார் மிரட்டல்... செல்போன் டவர் மீது ஏறி ரௌடி தற்கொலை முயற்சி...
இன்பார்மராக மாறக்கூறி போலீசார் மிரட்டுவதால் செல்போன் டவர் மீது ஏறி ரவுடி தற்கொலை முயற்சி செய்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சென்னை கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற ஓட்டை வடை மணி வயது 29 இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ஓட்டை வடை மணி மீது முட்டை கோபி என்ற ரவுடியை கொலை செய்த வழக்கு உட்பட 7 வழக்குகள் உள்ளன. தற்போது வழக்குகளில் எதுவும் சிக்காமல் திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து போலீசார் தனக்கு தொந்தரவு தருவதாக கூறி இன்று காலை 9 மணி அளவில் கொடுங்கையூர் தண்டையார்பேட்டை ஹை ரோடு சின்னான்டிமடம் அருகே செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டார். அவரது நண்பர்கள் மற்றும் மனைவி உள்ளிட்டோர் எவ்வளவு கூறியும் கீழே இறங்கவில்லை பாதி அளவு செல்போன் டவரில் ஏறி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக் கொண்டே இருந்தார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது சம்பவம் அறிந்து நேரில் வந்த கொடுங்கையூர் போலீசார் அவரிடம் சமாதானம் பேசினர் 20 நிமிட போராட்டத்திற்கு பின்பு ஓட்டை வடை மணி பத்திரமாக கீழே இறங்கி வந்தார். அவரை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மணிகண்டன் குடும்பத்தார் 110 போட்டு திருந்தி வாழும் மணியை இன்பார்மராக மாறி குற்றவாளிகளை பிடித்து கொடுக்க சொல்லி தொந்தரவு செய்வதாகவும், முடியாது என்று கூறியதால் பழைய வழக்கில் கடந்த வாரம் சிறைக்கு அனுப்ப முயற்சி செய்ததாகவும், ஆனால் நீதிபதி முன்பாக தான் குற்றம் செய்யவில்லை என்றும் தான் திருந்தி வாழ்வதாக கூறியதை அடுத்து நீதிபதி விடுவத்தால் போலீசார் தன்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
Tags :