சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488 கோடி கடன்.. வட்டி மட்டும் ரூ.8.50 கோடிஅதிர்ச்சி தகவல்

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிக வளாகங்கள் குறித்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488 கோடி கடன் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும், அந்த கடனுக்கு, மாதந்தோறும் ரூ.8.50 கோடி வட்டி கட்டுவதாக தெரிவித்துள்ளார். ரூ.3,065.65 கோடி கடன் நிலுவையில் இருந்த நிலையில் ரூ.1,577.10 கோடி கடன் அடைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Tags :