வேறுபெண்ணுடன் திருமணமா கொதித்தெழுந்து கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண் கைது.
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). அவருக்கும், அவரது உறவினரான மீனா(27) என்பவருக்கும் தகாத உறவு இருந்துவருகிறது. இந்த நிலையில் கார்த்திக், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இதையறிந்த மீனா, கார்த்திக்குடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் மீனா, கார்த்திக் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :



















