அதிக பணம் தருவதாக ரூ. 3 கோடி சுருட்டல்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சாந்திபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ஜாய்ஸ் விக்டோரியா, 55. இவரது கணவர் பிராங்க்ளின், 65, மகள் மெர்லின் கிறிஸ்டோ, 28, மருமகன் ஜோ இன்பென்ட், 33, ஆகியோர் சேர்ந்து, சர்க்கரை ஏற்றுமதி தொழில் செய்கின்றனர். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 10 மாதத்திற்கு தலா, 25, 000 ரூபாய் திருப்பித் தருவதாக பலரிடம் ஆசை வார்த்தை கூறி, 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வசூலித்து, ஏமாற்றி உள்ளனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஜான், 44, என்பவர், ஆவடி மாநகர காவல் ஆணையகரத்தில் அளித்த புகாரின்படி, நால்வரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :



















