ரவுடியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் ...

by Admin / 10-08-2021 05:09:43pm
ரவுடியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் ...

புதுச்சேரியில் ரவுடியின் வீட்டில் பதுக்கி  வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார், தலைமறைவான ரவுடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் அடுத்த பாக்கமுடையான்பேட்டை  சேர்ந்தவர் ரவுடி தீனதயாளன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன் முதலியார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெக்ரியேஷன் கிளப் ஒன்றில் 4.5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை குற்ற பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார், ரவுடி தீனதயாளனை தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில் அவர் வீட்டில் இருப்பதாக சிறப்பு அதிரடி போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து தீனதயாளன் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை மேற்க்கொண்டனர்

. அப்போது அவரின் வீட்டின் மொட்டை மாடியில் மணல் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார், தலைமறைவான ரவுடி தீனதயாளனை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories