இலங்கை அமைச்சர் விபத்தில் உயிரிழப்பு

by Staff / 25-01-2024 03:06:47pm
இலங்கை அமைச்சர் விபத்தில் உயிரிழப்பு

இலங்கையை சேர்ந்த அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் சாலை விபத்தில் அகால மரணமடைந்தனர். கட்டுநாயக்கே நெடுஞ்சாலையில் இவரது வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. முதலில் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேர் காயங்களுடன் ராகம் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமைச்சர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via