தேனியில் குரங்கு அம்மைக்கு பெண் பலி..?

by Editor / 21-09-2022 10:05:40pm
தேனியில் குரங்கு அம்மைக்கு பெண் பலி..?

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி பரிமளா(35) அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பரிமளாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் வெங்கடேசன் ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் ஓய்வு பெற்று தற்போது கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

 

Tags :

Share via

More stories