மிசோரமில் ஆளும் கட்சியை மிரள விடும் ஜோரம் மக்கள் இயக்கம்

by Staff / 04-12-2023 12:03:01pm
மிசோரமில் ஆளும் கட்சியை மிரள விடும் ஜோரம் மக்கள் இயக்கம்

மிசோரமில் 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோரம் மக்கள் இயக்கம் 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மிசோ தேசிய முன்னணி 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம் தங்கா முதலமைச்சராக உள்ளார். ஆனால், இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்களின் படி, முதன்முறையாக அம்மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைக்கும் என தெரிகிறது.

 

Tags :

Share via