மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்: கலெக்டரிடம் கமல்ஹாசன் மனு

by Editor / 02-08-2021 07:22:44pm
மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்: கலெக்டரிடம் கமல்ஹாசன் மனு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவை வந்தார். அவர் இன்று, நாளை என 2 நாட்கள் கோவையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் கோவையில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் அவர் மனு அளித்தார்.

பின்னர், நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

2020 ஜனவரி மாதத்திற்கு பின் கிராம சபை கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்களுடைய குறை.

இதனை மனுவாக அளித்துள்ளோம்.

இதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழக பட்ஜெட்டில் கிராம சபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதையும் மனுவில் குறுப்பிட்டுள்ளோம்.

கோவையில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நீங்கள் ஏன் நடத்தவில்லை என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு

கூட்டம் கூட வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. இவ்வளவு கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதால் தான் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நன்றி என் மனதில் உள்ளது என்று கமல்ஹாசன் பதிலளித்தார்.

இன்றும் நாளையும் சில இரங்கல் கூட்டங்களுக்கு செல்கிறேன்.

இவ்வாறு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo