மக்களாட்சியின் கறுப்பு நாள் - முதல்வர் ஆவேசம்

by Staff / 08-08-2023 12:19:55pm
மக்களாட்சியின் கறுப்பு நாள் - முதல்வர் ஆவேசம்

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் விதமாக டெல்லி நிர்வாக மசோதாவானது மாநிலங்களவையில் நேற்று நிறவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள், 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்'' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories