மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது

by Editor / 13-05-2022 08:36:04pm
 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம், வருகின்ற ஜூன் 21 முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் விஜயகுமார் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதி நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது

 

Tags : The tenure of Union Finance Minister Nirmala Sitharaman and senior Congress leader P. Chidambaram is coming to an end.

Share via