இன்ஜினியரிங் படித்துவிட்டு திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள்!

by Editor / 19-04-2021 08:45:23am
இன்ஜினியரிங் படித்துவிட்டு திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்து வந்ததை அடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். வழிப்பறி நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனைக் கொண்டு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், வழிப்பறியில் ஈடுபட்டது செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் (31), திருவள்ளூர் அரண்வாயல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) என தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. குற்றவாளிகள் இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் என தெரியவந்தது.

அவர்கள் வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு கிளைச்சிறையில் இருந்தவர்கள். போலீஸ் நடமாட்டமில்லாத அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணிக்கு செயின் பறிப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழரசன் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் மீது கொலை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளன. மணிகண்டன் பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அவர் மீது பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரையும் போலீஸார் அம்பத்தூரில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :

Share via