தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு

by Editor / 25-11-2022 08:11:53am
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (25-11-2022) வெள்ளிக்கிழமை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து நேற்று வியாழக்கிழமை காலை வலுவிழந்தது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (25-11-2022 முதல் 28-11-2022) வரை) ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதில், அதிகபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
 

 

Tags :

Share via

More stories

Logo