விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் .

by Admin / 04-06-2023 01:09:26pm
விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் .

இந்தியாவை நிலைகுலைய வைத்த ஒடிசா மாநிலத்தில் மாவட்ட பகானாக பஜார் ரயில் நிலையத்தில் அருகே மூன்று ரயில்கள்  மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேருக்கு மேல் உயிர் இழந்து உள்ளதாகவும் 650 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .இந்நிலையில் .இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் பேசும்பொழுது, இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மீட்பு மட்டும் சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துவதாகவும் மம்தா பானர்ஜி கூறியது போல் இந்த விபத்து நடக்கவில்லை என்றும் எலக்ட்ரிக் இன்டெர்லாக்கில் மாற்றத்தால் இந்த கொடும் நிகழ்வு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்ஸ் ட்ரைன்நின்று கொண்டிருந்த பொழுது பிரதான லயனில் வரக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திடீரென தடம் மாறி லூப் லைன் வழியாக சென்றதால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தடம் மாறி சென்று  ரயில் பெட்டிகள் மற்றொரு பிரதான தண்டவாளத்தில் சரிந்து விழுந்ததன் காரணமாக பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

Tags :

Share via