பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

by Editor / 26-07-2023 03:43:53pm
பேச்சுப் போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ் வளர்ச்சித்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க நடப்பு நிதி ஆண்டில் அண்ணல் அம்பேத்கர்  பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி களில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 58 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் வேடசந்தூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி சீ.மோனிஷா முதல் பரிசும், பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவன் கு.ராஜாஜி இரண்டாம் பரிசும், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி மா.தேன்மொழி மூன்றாம் பரிசும் பெற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு பிரிவில் செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி செ.அழகுதீபா மற்றும் திண்டுக்கல் அரசு மாதிரிப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ரா.தேவதர்ஷினி ஆகியோர் சிறப்புப் பரிசு ம் பெற்றனர்.

கல்லூரி மாணவ. மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 21 கல்லூரி மாணவ . மாணவிகள் கலந்து கொண்டனர் இவர்களில் பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை(ம) பண்பாட்டுக் கல்லூரி முதுகலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவன் மோ.நாகஅர்ஜுன் முதல் பரிசும், திண்டுக்கல் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழக முதுகலை கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவி, மா.கன்யாஸ்ரீ இரண்டாம் பரிசும், கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை பொதுப்பணியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி காவியா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000ம், இரண்டாம் பரிசாக ரூ 3,000ம், மூன்றாம் பரிசாக ரூ 2,000ம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவில் சிறப்புப் பரிசாக ரூ 2,000 காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பெ.இளங்கோ மற்றும் நடுவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன
 

 

Tags :

Share via