தமிழ்நாட்டில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜுன் 1ஆம் தேதி திறப்பு

by Staff / 22-05-2023 02:41:47pm
தமிழ்நாட்டில் பள்ளிகள் திட்டமிட்டபடி  ஜுன் 1ஆம் தேதி திறப்பு

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் ஜுன் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். 2 மாத கால கோடை விடுமுறை முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பள்ளிகள் திட்டமிட்டபடி ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo