விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சி

by Editor / 04-09-2021 05:42:43pm
விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சி

ஆப் கானிஸ்தான் விமானப் படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதா கவும் , இந்தியாவுக்கு எதி ராக பாகிஸ்தானை பயன் படுத்துவதாகவும் அய் . நா . வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றம் சாட்டி உள்ளார் . அய் . நா . சபைக் கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி . இவர் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர் . அமெ ரிக்காவில் கேபினட் அமைச்சர் தகுதியைப் பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப் பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி .

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதை யொட்டி இவர் அமெரிக் காவின் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குச் சிறப்புப்பேட்டி அளித்தார் . அப்போது பேசிய அவர் , " ஜோ பைடன் நிர்வாகம் , இந்தியா ,  ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி , அவர்களது ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் .

முதலில் ஜோ பைடன் செய்ய வேண்டியது , நமது கூட்டாளிகளுடன் , அது தைவானாக இருந்தாலும் , உக்ரைனாக இருந்தாலும் , இஸ்ரேலாக இருந்தா லும் , ஜப்பானாக இருந்தா லும் சரி , அவர்களுடைய முதுகெலும்பாக இருப் போம் என்று மறு உறுதி செய்ய வேண்டும் . நமக்கு அவர்களும் தேவை . இரண்டாவது , உலக மெங்கும் நாம் பயங்கர வாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் . ஏனென்றால் , இந்த ( ஆப்கானிஸ்தா னில் ) தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப் பெரிய அளவில் தங்க ளுக்கு ஆள் சேர்ப்பார்கள் . அதை நாம் பார்க்க முடி யும் .

நாம் பாதுகாக்கப் பட்டுள்ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் . நமது இணையதள பாது காப்பு , பத்திரமாக இருப் பதை நாம் உறுதி செய்ய வேண்டும் . ஏனென்றால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து நம் தளங் களில் ஊடுருவுவார்கள் . ஏனென்றால் நாம் மீண் டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறி கள் எதுவும் இல்லை .

நாம் சீனாவைப் பார்க்க வேண்டும் . ஆப் கானிஸ்தானை தலிபான் கள் கைப்பற்றியுள்ள இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் . ஆப்கானிஸ் தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்கிறது . ( இந்த விமா னப்படை தளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது .)

சீனா , ஆப்கானிஸ் தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது . பாகிஸ் தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக் கிறது . நமக்கு நிறைய சிக் கல்கள் உள்ளன . எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம் , நமது கூட்டாளி களை வலுப்படுத்துவதா கும் .

அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் . நமது ராணு வத்தை நவீனப்படுத்த வேண்டும் . சைபர் குற்றங் கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை எதிர்கொள் வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் " என்று அவர் கூறினார்

 

Tags :

Share via