தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு துவங்கியது.20இலட்சம் பேர் எழுதுகின்றனர்.

by Editor / 09-06-2024 09:59:14am
தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு துவங்கியது.20இலட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று (ஜுன் 9) நடைபெறுகிறது. இதனை சுமார் 20இலட்சம் பேர் எழுதுகின்றனர்.கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் சென்று விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.

 

Tags : தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு துவங்கியது.20இலட்சம் பேர் எழுதுகின்றனர்.

Share via