நீ செய்யும் செயல் அனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு

by Admin / 10-01-2023 11:10:04am
நீ செய்யும் செயல் அனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு

அர்ஜீனன்-"கிருஷ்ணா,உங்களிடம் உபதேசம் பெற்றுக்கொண்ட எனக்கும் உங்கள் பக்தர்களுக்கும் நீங்கள் கூறும்அறிவுரைகள் என்ன.?"
கிருஷ்ணர்-"நான் சொன்ன இந்த ரகசியமான கீதை உபதேசங்களை கேட்க விரும்பாதவனுக்கும் பக்தி இல்லாதவர்களுக்கும் என்னிடம் குறைகாண்பவர்களுக்கும் கூறக்கூடாது."
கீதா உபதேசங்களைத்தெரிந்து கொண்டவர்கள்.அதை என்னுடைய பக்தர்களுக்குக்கூற வேண்டும்.அவ்வாறு கீதையை
கூறுபவர்களுக்கு எப்போதும் என்னுடைய அருள் கிடைக்கும்.அர்ஜீனா நாம்இருவருக்கும் நடந்த இந்த தர்மம் மிகுந்த
உரையாடலை எவன் படிக்கிறானோ அவன் என்னையே பூஜிக்கிறான்.இதை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் எந்த
மனிதன் கேட்கிறானோ அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.
அர்ஜீனா."நீ உன் மனதை ஒருமுகப்படுத்தி என் உபதேசங்களை கேட்டுக்கொண்டாயா?அஞ்ஞானம் என்ற உன்னுடைய
மயக்கம் நீங்கியதா?"
அர்ஜீனன்-" கிருஷ்ணா,எனது பகவானே உங்கள் அருளால் எனது மன மயக்கம் அழிந்தது.என்னுடைய குழப்பங்கள்
எல்லாம் நீங்கிவிட்டன.உங்கள் அறிவுரையை நான் ஏற்றுக்கொண்டேன்.நீங்கள் எனக்கு கட்டளை இடுங்கள்.அதன்படியே நடப்பேன்.
கிருஷ்ணர்-"அர்ஜீனா நீ எனது பக்தன்.என்னை நீ சரண் அடைந்து விட்டதால்,நீ செய்யும் செயல் அனைத்தையும்
என்னிடம் சமர்பித்து விடு.அப்போது உன்னை சேராது.ஆகவே,நீ போர் புரியாமல் இருக்காதே.நீ போர் புரியமாட்டேன்
என்று மறுத்தாலும்இயற்கை உன்னைததூண்டி விடும்.ஆகவே அர்ஜீனா நீ உனதுறூவில்லாகிய காண்டீபத்தை கையில் எடுத்துக்கொண்டு போருக்குத்தயாராக எழுந்து நில்."
அர்ஜீனன்-"கிருஷ்ணா,உங்களின் கட்டளைப்படியே நான் போருக்குத்தயாராகிவிட்டேன்."

 

Tags :

Share via