விஜயின் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சுராஜ் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சேலத்தில் நடந்த தமிழக வெற்றிக்காக தலைவர் விஜயின் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சுராஜ் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் கடந்த 20 ஆண்டுகளாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் தொழிலாக பணியாற்றி வந்துள்ளார். சீலநாயக்கன்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு பார்வையாளராக வந்திருந்த சுராஜ் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே திடீரென மயங்கி விழுந்ததாகவும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது .அவர் ஒரு வருடத்திற்கு முன்பு இதே அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் காவல்துறை தடவி தெரிவிக்கப்பட்டுள்ளது .இருப்பினும் அவரது நண்பர்கள் அவருக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன .இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் சேலம்,அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன,
Tags :



















