2026 பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? - தேமுதிக முக்கிய ஆலோசனை

by Editor / 11-06-2025 12:45:46pm
2026 பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? - தேமுதிக முக்கிய ஆலோசனை

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக நிர்வாகிகளுடன், 2026 பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? வைப்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அனைத்துப் பணிகளும் தேர்தல் பணிகளே. கட்சியினர் உடனடியாக களத்தில் இறங்கவேண்டும்” என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via