யானைக்கு உடல் எடையை குறைக்க பரிந்துரைத்த மருத்துவர்கள்
கோவை மாவட்டம் பேரூர் கோயிலில் உள்ள கல்யாணி என்ற யானையின் உடல் எடையை குறைக்க கால்நடை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். வனத்துறை சார்பில் 31 வயதான கல்யாணி யானைக்கு மேற்கொண்ட உடல் எடை மற்றும் இரத்த பரிசோதனையின்போது 4000 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டிய யானை 4230 கிலோ இருந்தது. இதையடுத்து உடல் எடையை குறைக்கும் வகையிலான உணவுகளை வழங்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
Tags :