தேர்வு முடிவுகள் வெளியான 6 மாதங்களுக்குள்மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்
தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 6 மாதங்களுக்குள்மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்' என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இதனால் உயர் படிப்பு மற்றும் வேலையில் சேருவதற்கு அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக, ஏற்கனவே, 2016ல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியான 6 மாதங்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags : யு.ஜி.சி.



















