சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய மலையேறிய பக்தர் பரிதாப பலி.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சிவகங்கை தென்கரையைச் சேர்ந்த மகா (55) என்பவர், உறவினர் முத்துகிருஷ்ணனுடன் நேற்று சாமி தரிசனம் செய்ய மலையேறினார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் டோலி மூலம் கீழே கொண்டுவரப்பட்டு, பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய மலையேறியா பக்தர் பரிதாப பலி.



















