100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் 12.01.2023 அன்று இராமானுஜம்புதூர், இந்திராநகரை சேர்ந்த தளவாய்மாடன் (24) என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், மறுகால்குறிச்சி, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் செல்லதுரை (25), கோவில்பத்து, சவலைக்காரத்தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் பிரவீன்குமார் என்ற பிரவீன் (23) ஆகிய இருவர் மீது வி.கே.புரம் காவல் ஆய்வாளர் பெருமாள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :