மாமியாரை ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். வயது 70. இவருடைய மனைவி கனகா. வயது 65. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.இவர்களுடைய மகன் ஆறுமுகம் இவர்களது வீட்டின் அருகேயே தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் தனியாக வசித்து வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கு கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, இரவு முதியவர்களான தம்பதியின் வீட்டின் கதவை அந்த மர்ம நபர்கள் தட்டியுள்ளனர்.அப்போது வெளியே வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சாரமாரியாக அடித்துள்ளனர்.இதனால் கனகா கத்தி கூச்சலிடிவே கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடியுள்ளனர்.இதனை அறிந்த அவருடைய மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி நான்கு சவரன் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் மூதாட்டியை தாக்கி நான்கு சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட விவகாரத்தில் மாமியாருடன் தகராறு காரணமாக மருமகளே ஆள் வைத்து தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம் மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால் பழிவாங்க மாமன் மகன் மூலமாக இவ்வாறு செய்ததாக மருமகள் வசந்தி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் மாமியாரிடமிருந்து பறிக்கப்பட்ட நகையை பறிமுதல் செய்த போலீசார் வசந்தி மற்றும் அவரது உறவினரான மைக்கேல்ராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர் சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Tags : மாமியாரை ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார்.