ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற தீர்மானம்.
ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை நடத்துவதற்கான தீர்மானத்தை சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது
இது குறித்த மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா சிறப்பு அந்தஸ்து ஒருதலை பட்சமாக நீக்கப்பட்டது என்றும் உறுப்பினர்களின் கடும் கரகோஷத்திற்கு இடையில் வாக்கெடுப்பு விவாதம் இன்றி எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் சட்டசபை அதன் வேலையை செய்து உள்ளது என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் முதல்வர்.
கடந்த 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்கான தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்களும் துறை முதலமைச்சரும் முன் வைத்தனர்.
இது ஜம்மு காஷ்மீர் மக்களினுடைய அடிப்படை உரிமை பண்பாடு மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்தை அரசியலமைப்பின் முக்கியத்துவம் பெரும் நோக்கில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது தங்களுக்கான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மறு சீரமைப்பு எந்த ஒரு செயல்முறையும் ஒற்றுமைக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரின் மக்களின் நியாயமான உரிமைகள் இரண்டையும் பாதுகாக்கவே இந்த சட்ட மன்றம் வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே இருக்கும் பாஜக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :